குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
X

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு





வெடிகுண்டு சோதனைக்கு பிறகு புரளி என தெரியவந்தது

குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரி வளாகத்திலேயே தனியார் பள்ளியும் செயல்பட்டு வரும் நிலையில் இன்று மாலை பள்ளி அலுவலகத்திற்கு வந்த ஈமெயிலில் பள்ளிக்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்ற வந்த தகவலையடுத்து பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்களை அருகில் இருந்த கல்லூரி வளாகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர் இதுகுறித்து தாம்பரம் கமிஷனர் அலுவலகம் மற்றும் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் குன்றத்தூர் போலீசார் மற்றும் தாம்பரம் கமிஷனரா

க அலுவலகத்தில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி வளாகத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் சோதனை மேற்கொண்டனர் இந்த தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அச்சத்துடன் அழைத்துச் சென்றனர் நீண்ட நேர சோதனைக்கு பிறகு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது அதன் பின்னர்தான் வெடிகுண்டு புரளி விடுக்கப்பட்டது தெரியவந்தது. ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story