கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு சேர்வை.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு சேர்வை.
X
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு சேர்வை நடைபெற்றது.
பரமத்தி வேலூர், அக்.14- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு சேர்வை மிக விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருதல் கபிலர்மலையை கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலமாக சேர்வை நடைபெறும் வந்தடைந்த சுவாமி வில்லம்பு சேர்வை செய்தார். அதேபோல் வேலூர் பேட்டையில் எழுந்தருளியுள்ள புது மாரியம்மன் கோவிலில்  நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அம்பு சேர்வை நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை வேலூர்,  பேட்டை புது மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி 12- ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு புது மாரியம்மன் கோவில் வளாகத்தில் கொழு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் 9 நாட்கள் நடைபெற்றது. இதில் பரமத்திவேலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   முதல் மூன்று நாட்கள் சக்தி பூஜையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி பூஜையும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜையுமாக மொத்தம் 9 நாட்கள்  நடைபெற்றது .11- ஆம் தேதி புது மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவமும், 12- ஆம் தேதி இரவு கோவில் முன்பு அம்பு சேர்வையும், அதனை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதே போல் சீராப்பள்ளியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அஷ்டலிங்ககேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. மேலும் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு சேர்வை நடைபெற்றது.  விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story