கோவில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

கோவில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
X
சுசீந்திரத்தில்
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில வெளிநாட்டு பக்தர்கள் பெருமளவு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர் திருவிழா காலங்களில் அதிக பக்தர்கள் வருவதால் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏதாவது நடைபெறுகிறதா கூட்டத்தில் பக்தர்களோடு திருடர்களும் உள் நுழைந்து பக்தர்களின் உடைமைகளை திருடி செல்கின்றார்களா என்பதை கண்காணிப்பதற்காக தாணுமாலய சுவாமி கோவில் உட்பிரகாரம் மற்றும் வெழிபிரகாரங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அதிகளவு ஐயப்ப பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்று வருகின்றனர். வரும் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தாணுமாலயசுவாமி கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் ஆரம்பிக்கப்பட உள்ளது மேலும் மழைக்காலம் என்பதால் கேமராக்கள் சேதம் அடைந்துள்ளது அறிந்து இந்து அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் அனைத்து கேமராக்களும் சரியாக இயங்குகின்றதா சேதமடைந்த கேமராக்களை மாற்றி புது கேமராக்கள் வைக்கவும் சேதமடைந்த ஒயர்களை மாற்றி புது ஒயர்கள் போடும் பணியும் நேற்று நடைபெற்றது பணியின் போது தணுமாலய சுவாமி கோவில் மேலாளர் ஆறுமுகதரன் கணக்கர் கண்ணன் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்
Next Story