வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளித் தலைவரின் கவிதை நூல் வெளியீட்டு விழா.
X
Rasipuram King 24x7 |19 Nov 2024 5:28 PM IST
வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளித் தலைவரின் கவிதை நூல் வெளியீட்டு விழா.
தமிழ்ப்பேரவை சார்பில் குளித்தலை கிராமியம் அரங்கில் மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியின் தலைவர் பெ.ந. பழனிசாமி ஐயா அவர்களின் "செந்தமிழ்ச்சோலை" என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முனைவர் கடவூர் மணிமாறன் தலைமை தாங்கினார். கிராமியம் டாக்டர் போ.நாராயணன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியின் முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் இராமச்சந்திரன், துணைச்செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் துரைசாமி, நிர்வாக அலுவலர் வினோத்குமார் ,பள்ளி முதல்வர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு பள்ளித் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story