போராட்டத்திற்கு செல்ல இருந்த அங்கன்வாடி பணியாளர்களை தடுத்து சிறை வைத்த காவல் துறையினர்
Tiruchengode King 24x7 |20 Nov 2024 7:12 AM IST
போராட்டத்திற்கு செல்ல இருந்த அங்கன்வாடி பணியாளர்களை தடுத்து சிறை வைத்த காவல் துறையினர்
சென்னையில் தர மணியில் நடைபெற இருந்த அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி நடைபெற இருந்த பெருந்திரள் போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்துபேருந்துகளில் புறப்பட்டு சென்றஅங்கன்வாடி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் சிறை பிடிப்பு. திருச்செங்கோட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற 34பெண் பணியாளர்கள் ஒரு ஆண் என 35 பேர் திருச்செங்கோடு அரசினர்பெண்கள் மேல்நிலைப்பள்ளிஅருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருச்செங்கோடு மலையடிவாரத்தில் உள்ள ஆரிய வைசியர் திருமண மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பேருந்தில் இருந்து இறங்க மறுத்து போராட்டம். வீட்டிற்கு திரும்பிச் செல்ல காவலர்கள் அறிவுறுத்தல் மறுத்து பெண்கள் பேருந்திலேயே அமர்ந்த நிலையில் உள்ளனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்டஅங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது திமுக கடந்த தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளில் 133 வது வாக்குறுதியாக அறிவித்திருந்த படி அங்கன்வாடி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிக்கொடையாக ஆசிரியருக்கு பத்து லட்சம் உதவியாளருக்கு ஐந்து லட்சம் வழங்கிடும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 2000 ஆக இருப்பதை 9 ஆயிரம் ஆக உயர்த்தி தர வேண்டும் ஏழு வருடங்களாக காலிப் பணியிடங்களாக உள்ள இடங்களை நிரப்பி தர வேண்டும் ஒவ்வொரு அமைப்பாளரும் மூன்று மையங்களை பார்க்க வேண்டி இருப்பதால் பணி சுமை கூடியுள்ளது எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் இயங்காத செல்போன்களை மாற்றித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுக்க தரமணியில் உள்ள எங்கள் இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல நாளை பெருந்திரள் முறையீடு செய்ய புறப்பட்டு சென்றபோது எங்களை பிடித்து மண்டபத்திற்கு கொண்டு வந்துள்ளனர் நாங்கள் இறங்க மறுத்து போராடி வருகிறோம்.நாளை போராட்டம் முடிந்த பிறகு 21 ஆம் தேதி சுற்றுலாவாக சுற்றிப் பார்த்துவிட்டு வர திட்டமிட்டிருந்த எங்களை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் இதுபோல் இதுவரை நடந்ததில்லை தற்போது இந்த நடைமுறை கண்டனத்திற்குரியது என கூறினார். நாமக்கல் மாவட்டத்திலிருந்து சென்னை புறப்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறை சிறைபிடித்து அனைவரையும் திரும்பி வீடுகளுக்கு செல்லுமாறு கூறி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோரிக்கை போராட்டத்தில் கலந்து கொள்ள நாமக்கல், எருமைப்பட்டி, திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்து மூலம் சென்னை புறப்பட்ட பேருந்துகளை ஆங்காங்கே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் திரும்ப வீடுகளுக்கு செல்லுமாறு கூறி வருகின்றனர் . அதனை ஏற்க மறுத்து பஸ்ஸிலேயே அமர்ந்தபடி பெண்கள் போராட்டம்..... இரவு நேரம் என்றும் பாராமல் போராட்டத்திற்கு கிளம்பியவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி இருப்பதால் நாமக்கல்,சேந்தமங்கலம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, மல்லசமுத்திரம் திருச்செங்கோடு என நாமக்கல் மாவட்டத்தில் 6 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது ஆறு பேருந்துகளிலும் இருந்தபடியே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் விடுவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர் 35 நபர்களையும் இன்று அதிகாலை 3 மணி அளவில் காவல்துறையினர் விடுவித்தனர்
Next Story