வேலூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

வேலூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.
X
வேலூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,டிச.7: நாமக்கல் மாவட்டம் வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் சார்பாக வேலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவர் லட்சுமி முரளி தலைமை வகித்தார். செயல் அலுவலர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். முகாமில் தூய்மைப் பணியாளர் ஆண்களுக்கு வாய் மற்றும் பற்கள் பரிசோதனை செய்யப்பட்டது. பெண் தூய்மை பணியாளர்களுக்கு மார்பகம் சார்ந்த பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் முகாம் இரண்டாம் கட்டமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிமைகளில் நடைபெறும். முகாமில் மருத்துவ அலுவலர் ஜெயந்தி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story