கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்.முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்.முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
X
தாராபுரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் முகாம். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குப்பட்ட என். சி.பி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்து மருத்துவ முகாமில் கண் கண்ணாடி ,மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமில் பயனடைந்தனர்.மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாராபுரம் நகரமன்றத் தலைவர் பொறியாளர் கு. பாப்பு கண்ணன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் வயதான முதியோர்களுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினர்.இதுகுறித்து நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் கூறுகையில், நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஏதாவது தொந்தரவுகள் இருந்தால் அவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.தேன்மொழி , அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் பெரியசாமி ,பிரபாகரன், விஸ்வநாதன் , ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள் விக்னேஷ் ,ரம்யா , பிலிப் பாஸ்கர் ,ஜெயராஜ் நந்தினி பிரியா ,நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் ,நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.யூசுப் ,செலின் பிலோமினா ,உமா மகேஸ்வரி ,ஷாலினி பவர் சேகர் ,சாந்தி இளங்கோ ,மலர்வழி கணேசன் , தனலட்சுமி அய்யப்பன்,ஷீலா மாதவன் , நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார் ,மலைச்சாமி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல், சுகாதார ஆய்வாளர்கள் தனபால் , நவீன் செவிலியர்கள் ,நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story