கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்ககூடாது விவசாயிகள் கடும் எதிர்ப்பு., நாமக்கல் ஏம்.பி மாதேஸ்வரன் நேரில் ஆய்வு.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்ககூடாது விவசாயிகள் கடும் எதிர்ப்பு., நாமக்கல் ஏம்.பி மாதேஸ்வரன் நேரில் ஆய்வு.
X
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்ககூடாது விவசாயிகள் கடும் எதிர்ப்பு., நாமக்கல் ஏம்.பி மாதேஸ்வரன் நேரில் ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி.
பரமத்தி வேலூர், டிச.8: நாமக்கல் மாவட்டம். பரமத்தி வேலூர் அடுத்துள்ள இருக்கூர், மாணிக்கநத்தம், மற்றும் வீரணம் பாளையம் ஊராட்சிகளின் விவசாய பயன்பாட்டிற்கு தேக்கி வைக்கப்பட்ட நீர்நிலையில் பரமத்தி பேரூராட்சி, வேலூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள சாக்கடை நீர் மற்றும் கழிவு நீரை கொண்டு வந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 150 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என 3 ஊராட்சி பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் கணக்கில் தென்னை வாழை கரும்பு போன்ற பயிர் செய்து விவசாய தொழில் செய்து வருகின்றனர் ஏற்கனவே தனியார் பேப்பர் மில் கழிவுகளால் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் பாதிக்கப்பட்டள்ளது . இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. காலாவதியான கல்குவாரி குழியில் மழை நீரை தேக்கி வைத்து விவசாயம் செய்து கொள்ளலாம் வேற எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு விதி விதியை மீறி திட்டத்திற்கான பணிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இந்த மூன்று ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்து குறிப்பாக கால்நடைகள் ஆடு மாடு கோழிகள் என வளர்த்து வருகின்றனர் ஆடு மாடுகள் கூட இந்த நீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியாது காற்று மாசுபடும் நிலத்தடி நீர் மாசுபடும் தொற்றுநோய் பரவும் அபாயங்கள் உள்ளது. கல்குவாரியில் மழை நீர் நிறையும் போது அந்த நீர் எங்கள் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு ஊற்றுகளாக கிடைக்கின்றது மேலும் வறட்சி காலங்களில் இந்த ஊற்றுகளால் இப்பகுதி கிராமங்களே பயனடைந்து வருகிறது. ஏற்கனவே நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டு கல்குவாரி நீர்நிலை இதன் சுற்று பகுதிகளில் குடியிருப்பு விவசாயம் மற்றும் கால்நடைகள் இருப்பதால் இவ்விடம் கழிவு நீரை சுத்திகரிக்க உகந்த இடம் அல்ல என தெரிவித்து விட்டு சென்று விட்டார். எனவே இந்த நீர் நிலைக்கு கழிவு நீரை கொண்டு வரும் திட்டத்தை தடுத்து எங்களது உயிரையும் விவசாயத்தையும் கால்நடைகளையும் வாழ்வாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாதேஸ்வரன். எம்பி யிடம் தெரிவித்தனர் அவரும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்டு இந்த இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வராது என பொதுமக்களிடம் உறுதி அளித்து சென்றார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இப்பகுதியை காரில் இருந்தவாறு மேலோட்டமாக பார்வையிட்டு சென்றிருப்பார். இப்பகுதி மக்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இந்த இடத்தில் 60 குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவித்தனர் கண்டிப்பாக அதிகாரிகளிடம் கலந்து பேசி இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையாது என்று தெரிவித்தார் மேலும் பரமத்தி வேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் விரைவில் அமையும் தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வில். நாமக்கல் புறநகர் மாவட்ட துணை செயலாளர் பச்சாங்காடு பழனியப்பன், ஜேடர்பாளையம் சந்திரசேகர், வ வீரணம் பாளையம் பொறுப்பாளர்கள் மாணிக்கநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி மற்றும் மாணிக்கநத்தம் முன்னாள் தலைவர் எஸ்.கே. காளியண்ணன் நிதி பைனான்ஸ் கோவிந்தன், சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story