எர்ணாபுரம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிடம் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தல்!

கொல்லிமலைக்கு என்று மின்சார வாரியத்திற்கு தனியாக அரசு வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும்!
மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசுகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் அதில்..... நாமக்கல்லில் இதுவரையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அரசு சார்பில் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள மின்சார துறைக்கு உண்டான இடத்தில் நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கும், எர்ணாபுரம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கும், கொல்லிமலையில் மழைக்காலங்களில் ஏற்படும் மின்வெட்டு மற்றும் மின்சார துண்டிப்பு உள்ளிட்ட இடர்பாடுகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காகவும்,மின்சாரம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காக மின்சார வாரியம் சார்பில் புதிய அலுவலகம் அமைப்பதற்கும் மேலும் பொது மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளின் போது மின்சார வாரியம் சார்பில் பொருட்களை கொண்டு செல்வதற்கும், மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கொல்லிமலைக்கு என்று மின்சார வாரியத்திற்கு தனியாக அரசு வாகனம் ஏற்பாடு செய்வது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்.இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளர் விசா சண்முகம், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சந்திரசேகர், நாமக்கல் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் ராஜா, கொள்கை பரப்புச் செயலாளர் கந்தசாமி, நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story