தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐயப்ப பக்தர் பலி

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐயப்ப பக்தர் பலி
X
குமாரபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐயப்ப பக்தர் பலியானார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் தரணிதரன், 24. தனியார் சாயமிடும் நிறுவன பணியாளர். இவர் ஐயப்பன் கோவிலுக்கு போக மாலை போட்டுள்ளார். இவருக்கு சளி பிடித்து உடல்நலம் இல்லாமல் போனதால், டிச. 3ல், குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். நேற்றுமுன்தினம் இவரது வீட்டில் படுத்திருந்தார். காலையில் எழுந்து இவரது தாயார் தமிழரசி பார்க்கும் போது, எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தார். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று பார்த்த போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழரசி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story