மேலூரில் பிளஸ்டூ மாணவி மாயம்

மேலூரில் பிளஸ்டூ மாணவி மாயம்
X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிளஸ்டூ பள்ளி மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தெற்கு தெரு கக்கன்ஜி காலனியில் குடியிருக்கும் ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் மேலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி மாலை 6:30க்கு விட்டு விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தாயார் ராஜேஸ்வரி நேற்று (டிச.8)மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகிறார்கள்.
Next Story