ராமநாதபுரம் உலகம் பலம்பர மாணவர்களின் பள்ளி மாணவர்களின் பிரார்த்தனை நடைபெற்றது

ராமநாதபுரம் உலகம் பலம்பர மாணவர்களின் பள்ளி மாணவர்களின் பிரார்த்தனை நடைபெற்றது
X
புகழ்பெற்ற உத்திரகோசமங்கை திருத்தளத்தில் அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவர்களின் பிரார்த்தனை நடைபெற்றது
பொங்கிப் பெருகிடும் பொன்னான மார்கழி திங்களில் உலகம் செழித்திட எங்கும் நிறைந்திடும் எம் பெருமானாகிய சிவபெருமான் உலகில் அவதரித்த முதல் தளமான திரு உத்தரகோசமங்கையில் மங்களங்கள் அருளும் மங்களநாதராய் வீற்றிருக்கின்றார் அவரின் சன்னதியில் நடைபெறும் மார்கழி உற்சவத்தை ஒட்டி ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி எவ்வுயிரும் மயங்கும் மழலை மொழியில் இன்னிசையால் கூட்டு வழிபாடு செய்தனர் . இதில் மார்கழி ஐந்தாம் நாளை முன்னிட்டு மாணிக்கவாசகரின் திருவம்பாவை ஐந்தாம் பாசுரம் தொடங்கி விநாயகர் துதி, முருகன், அம்பாள், சரஸ்வதி என அனைவரின் நாமம் சிறக்க எல்லோர் மனங்களும் கசிந்துருகும்படி பாட எம்பெருமானும் மனமகிழ்ந்து அருள் பாலிக்க அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் பக்தி என்னும் இசை மழையில் நீந்தித் திளைத்தனர். இதற்கு இசைப் பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்ற துணையாக விளங்கினர்.
Next Story