போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாதாந்திர சாதாரண ஒன்றிய பெருங்குழு கவுன்சிலர்கள் கூட்டம்

கூட்டம்
தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாதாந்திர சாதாரண ஒன்றிய பெருங்குழு கவுன்சிலர்கள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுதா மற்றும் துணைத் தலைவர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானங்கள் இடம்பெற்று இருந்த சூழ்நிலையில் ஒன்றிய கவுன்சிலர்கள் அனுமதிக்காததால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.மேலும் இந்த கூட்டத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஐயப்பன் கூட்டத்தை புறக்கணித்த சூழ்நிலையில் கடந்தஆறு மாத காலங்களாக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் ஐயப்பன் அவர்களை கண்டித்து ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ,துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐயப்பன் ஊராட்சி மன்றத்தை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் கூறி ஐயப்பன் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த முற்றுகை போராட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
Next Story