அமித்ஷா உருவ பொம்மைக்கு பாடை கட்டி, சங்கு ஊதி, தாரை தப்பட்டை அடித்து இறுதி ஊர்வலம்
X
Dindigul King 24x7 |21 Dec 2024 7:56 AM IST
மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மைக்கு பாடை கட்டி, சங்கு ஊதி, தாரை தப்பட்டை அடித்து இறுதி ஊர்வலம் நடத்தி நூதன முறையில் திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக நேற்றைய முன்தினம் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர், அம்பேத்கர் எனக் கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை கூறினால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்தும், ராகுல் காந்தி மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மைக்கு பாடை கட்டி, சங்கு ஊதி, தாரை தப்பட்டை அடித்து இறுதி ஊர்வலம் நடத்தி நூதன முறையில் திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமித்ஷா உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையினர் உருவ பொம்மையை அப்புறப்படுத்தினார்.
Next Story