வழிபோக்கர் மண்டப தூண்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பரா?
X
Kanchipuram King 24x7 |13 Jan 2025 4:51 PM IST
உத்திரமேரூரில் மண்டப தூண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தில், வந்தவாசி --- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையோரத்தில், 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வழிபோக்கர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை வந்தவாசி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு, நடைபயணமாக செல்லும் யாத்ரீகர்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இச்சாலை 54 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, வழிபோக்கர் மண்டபத்தின் முன்பகுதி அகற்றப்பட்டது. அதில் மண்டபத்தில் இருந்த பாரம்பரியமிக்க தூண்கள் அகற்றப்பட்டு, அங்குள்ள குளக்கரை அருகே போடப்பட்டு உள்ளன. இந்த தூண்களில், சிவபெருமான் பாம்பின் மீது அமர்ந்து இருக்கும் உருவமும், பல்வேறு தகவல்கள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு உள்ளன. இந்த தூண்களில் உள்ள தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள, தூண்களை மீட்டு பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story