உண்டு உறைவிட மையத்தில் பொங்கல் விழா கோலாகலம்

உண்டு உறைவிட மையத்தில் பொங்கல் விழா கோலாகலம்
X
காஞ்சிபுரத்தில் உள்ள தனியா தொண்டு நிறுவனம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிப்பாக்கத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில், பள்ளி செல்லா, பள்ளியிடை நின்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, முதுநிலை திட்ட மேலாளர் துாயவன் தலைமையில், நேற்று பொங்கல் விழா நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் குளோரி எப்சி, ஒன்றிய மேலாளர்கள் நிஷ்யா, கீதா, சூரியகலா, கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி, 62 மாணவர்களுக்கு புத்தாடை வழங்கினார். குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல், முதுநிலை திட்ட மேலாளர்கள் சுந்தர், நம்பிராஜன், ராஜவேலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், தனித்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Next Story