மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்தவர்  பலி
X
மதுரை செக்கானூரரணி அருகே எலக்ட்ரீசியன். மாடியிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடி மேல தெருவை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் ராமர்( 30)என்பவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி பொன்னமங்கலத்தில் உள்ள முத்து என்பவரின் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் காலை 9 மணி அளவில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று( ஜன.13) காலை உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை பழனிச்சாமி சொக்கனூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story