அலங்காநல்லூர் அருகே பெண் சடலம் மீட்பு
X
Madurai King 24x7 |14 Jan 2025 12:23 PM IST
மதுரை அலங்காநல்லூர் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பெரிய ஊர்சேரி கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் என்பவர் நேற்று முன்தினம் (ஜன.12) அலங்காநல்லூர் பெரியார் ஆற்று பாலம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இருப்பதாக உதவியாளர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த பின்பு அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்ற விவரத்தை அறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story