அணைப்பாளையம்- லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்தவர் படுகாயம்.

அணைப்பாளையம்- லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்தவர் படுகாயம்.
அணைப்பாளையம்- லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்தவர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பாளையம் அருகே உள்ள சாணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி வயது 42. கூலி தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைப்பாளையம் பகுதியில் செயல்படும் ரவி ப்ளூ மெட்டல் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஜனவரி 12ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில், ரவி ப்ளூ மெட்டல் நிறுவனத்தில், ப்ளூ மெட்டல் கற்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெரியசாமியை விட்டு கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.
Next Story