ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா‌.

ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா‌.
X
சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்,புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டம், இராஜன்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜமங்களாம்பிகை சமேத ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, 2-ஆம் கால யாக சாலை பூஜை, 3-ஆம் கால யாக சாலை பூஜைகளும், அதைத் தொடா்ந்து பல்வேறு ஹோமங்களும், வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா், 4-ஆம் கால யாக சாலை பூஜைகளும், புண்ணியாக வாசனம், மண்டப பூஜை, நாடிசந்தானம், பூரணாஹுதி, தீபாராதனையும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாத்ராதானம் அதைத் தொடா்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், 10 மணி முதல் 11 மணிக்குள் சம்பந்த விநாயகா், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலா், வேணுகோபாலா், வீர ஆஞ்சநேயா் மற்றும் சகல பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிவ வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ராஜமங்களாம்பிகை சமேத ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Next Story