கல்பாடி ஊராட்சியில் முறைகேடு

கல்பாடி ஊராட்சியில் முறைகேடு
X
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் (ப.சக்திவேல்), ஊராட்சி செயலாளர் (காமராஜ்) இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை கண்டறிந்து ஊராட்சியின் வரவு செலவுகள் விவரத்தினை தணிக்கை செய்து, முறைகேடு செய்த தொகையை பறிமுதல் செய்து ஊராட்சி நிதியில் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர்: கல்பாடி ஊராட்சியில் முறைகேடு; தணிக்கை செய்து, தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க மனு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைத்தீர் கூட்டத்தில், ராஜீவ்காந்தி என்பவர் தலைமையில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவிவரம்: எங்கள் கல்பாடி ஊராட்சியில் 06.01.2020 முதல் 05.01.2025 வரை ப.சக்திவேல் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தார். கலபாடி ஊராட்சியில் 4 குக்கிராமங்கள் உள்ளன. எங்கள் ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் ஆரம்பித்த காலங்களிலிருந்து தாழ்த்தப்பட்டவர்கள் வகுப்பை சார்ந்த யாரும் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தது இல்லை. தற்பொழுது இட ஒதுக்கீடு சுழற்சி முறை அமல்படுத்தியதால் தாழ்த்தப்பட்ட வகுப்டை சார்ந்த ப.சக்திவேல் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்ப்பட்டார். ஏன் என்றால் கடந்த 25 ஆண்டுகளாக நான்கு கிராமங்களிலும் எந்தவிதமான பணியிணையும் அரசு நிர்யிணித்த 100 சதவீதம் வேலை செய்யமால் அரசின் நிதி. ஊராட்சியின் பொது நிதி மற்றும் கல்குவாரி நிதி ஆகியவற்றை வேலையை முழுமையாக செய்யமாலும் ஒருமுறை செய்த அதே வேலையை மிக தெளிவாக போட்டோ எடுத்தும் வெவ்வேறு பணியாளர் இடம் ரூ.500, ரூ.1000 பணம் கொடுத்து தேவையான இடங்களில் வெற்று பேப்பரில் கையொழுத்து பெற்று பலகோடி ரூாய்களை ஊராட்சி நிதியை கையாடல் செய்துள்ளனர். ஊராட்சிக்கு தேவையான பைப் லைன், தெருவிளக்கு, சுகாதாரப் பொருட்கள் இவற்றை கொள்முதல் செய்யமாலே கொள்முதல் செய்தததாக ஊராட்சியின் செயலாளர் காமராஜ் அவருடைய சமூகத்தை சார்ந்தவர் மற்றும் அவரது உறவினர்களின் பெயரில் GST எண் எடுத்துக் கொண்டு தலைவரின் ஏழ்மையான நிலையையும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சர்ந்தவர் என்பதாலும், ஒரு சிறிய தொகையை கொடுத்துவிட்டு பல லட்சம் ரூபாய்-வை கையாடல் செய்து உள்ளார் என்பதற்கு தற்பொழுது அவருடைய சொத்து மதிப்பே சாட்சியாகும். கடந்த 26.01.2025 அன்று நடைப்பெற்ற கிராம சபைக்கு கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் வருகிறார் என்பதை அறிந்தோம். அதனால் எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என நம்பி எங்களுடைய அன்றாட வேலைகளை விட்டுவிட்டு கிராம சபை கூட்டத்திற்கு மிகுந்த நம்பிக்யுைடன் வந்தோம். ஆனால் ஊராட்சியின் வரவு செலவுகளை விபரங்களை விரிவாக சொல்ல வேண்டிய கடமை உடைய ஊராட்சி செயலாளர், கூடுதல் ஆட்சியர் அங்கு இருக்கும்பொழுதும் அவர் அங்கிருந்து நான் சிறுவாச்சூர் ஊராட்சிக்கு செல்கிறேன் என்று சென்றுவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்திலேயே அதிக ஆதிதிராவிடர் மக்கள் தொகை கொண்ட ஊர் எங்கள் ஊர் ஆகும். அதிக கல்குவாரிகள் கொண்ட கிராம எங்களது கிராமம். அதிக கிரஷர்கள் கொண்ட கிராம எங்களது கிராமம். அதிக சொந்த வருவாய் உள்ள கிராமம் (கல்குவாரிகள் (ம) கிரஷர்கள்) , அதே போல கல்குவாரிகள், கிரஷர்களிருந்து வரக்கூடிய மாசுக்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சியின் கழிவுநீர் சுத்திரிக்கப்படமால் வரக்கூடிய கழிவுகள் அவதிப்படக்கூடிய மக்கள் நாங்கள் தான். எனவே, கல்குவாரிகள், கிரஷர்களிருந்து பெறப்படும் நிதியைகளை கொண்டு முறைகேடுகள் செய்யமால் 50% வேலை செய்து இருந்தால் கூட எங்கள் ஊராட்சி தன்னிறைவு அடைந்து இருக்கும். மேற்கண்ட முறைகேடுகள் பற்றியும் வரவு செலவு பற்றியும் கூடுதல் ஆட்சியர் /திட்ட இயக்குநரிடம் கேட்டோம், ஆனால், அரசு உயர்பதவியில் இருக்கும் அவர் நாங்கள் கேள்வி கேட்டதற்கு, அரசு அதிகாரியை பணி செய்யவிடமால் தடுத்தார்கள் என கிராம மக்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் மூலமாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பேன் என மிரட்டினார். ஊராட்சி செயலாளர் காமராஜ் என்பவர் ஊராட்சி உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய அலுவலர்களிடம் தன்னுடைய பணப் பலத்தாலும், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரும் அலுவலர்கள் அனைவருரையும் தன்னுடைய வலையில் வீழ்த்தி, செயலாளர் செய்யும் முறைகேடுகள் பற்றி கண்டுகொள்வதும் இல்லை. எந்தவிதமான நடவடிக்கை அவர்மீது எவரும் எடுப்பதும் இல்லை. எங்கள் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை தினமும் நடைபெறுகிறது. எங்கள் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. வார்டுக்கு 200 பேர் வீதம் தினமும் வேலை மக்களிடம் ஒரு நபருக்கு ரூ.100 வீதம் ரூ.20,000/- வசூல் செய்து பணித்தள பொறுப்பளர் மூலம் ஊராட்சி செயலாளரிடம் கொடுத்து விடுகின்றனர். இதனால் ஊராட்சி செயலாளர் தினமும் ரூ.20,000/- பெற்றுக் கொண்டு தனக்கு வேண்டிய JCB உரிமையாளருக்கு மணிக்கு ரூ.1000 என்று ரூ.5000 கொடுத்து விட்டு கையாடல் செய்து கொண்டு இருக்கிறார். பணித்தள பொறுப்பாளர் என்பவர் 100 நாளைக்கு ஒருமுறை மாற்றம் செய்ய வேண்டும், ஆனால் 6 வருடங்காக அதே பணித்தள பொறுப்பாளரை வைத்து கொண்டு செயலாளர் கையாடல் செய்து கொண்டு இருக்கிறார். எனவே, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் (ப.சக்திவேல்), ஊராட்சி செயலாளர் (காமராஜ்) இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை கண்டறிந்து ஊராட்சியின் வரவு செலவுகள் விவரத்தினை தணிக்கை செய்து, முறைகேடு செய்த தொகையை பறிமுதல் செய்து ஊராட்சி நிதியில் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
Next Story