ஆரணியில் அதிமுக, திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு.
Arani King 24x7 |4 Feb 2025 11:57 AM IST
ஆரணியில் அண்ணா நினைவு தினம் முன்னிட்டு அதிமுக, திமுக கட்சியினர் சார்பில் ஆரணி அண்ணாசிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து அனுசரித்தனர்.
ஆரணியில் அண்ணா நினைவு தினம் முன்னிட்டு அதிமுக, திமுக கட்சியினர் சார்பில் ஆரணி அண்ணாசிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து அனுசரித்தனர். அதிமுக. ஆரணி அதிமுக சார்பில் பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணாசிலைக்கு மாவட்டஅவைத்தலைவர் அ.கோவிந்தராசன் மாலை அணிவித்தார். மேலும் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கும் மாலை அணிவித்து அனுசரித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட பேரவை செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், திருமால், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஏ.ஜி.ஆனந்தன், கண்ணமங்கலம் பாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கலைவாணி ஜோதி, மாவட்டஇணைசெயலாளர் வனிதாசதீஷ், நிர்வாகிகள் சிவக்குமார், சசிகலா சேகர், குமரன், வெங்கடேசன், விநாயகம், சுப்பிரமணி, மீனவரணி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக. ஆரணி திமுக சார்பில் பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து திமுகவினர் ஊர்வலமாக அண்ணாசிலை வரை சென்று அவரது சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் மாலை அணிவித்தார். பின்னர் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கு நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி மாலை அணிவித்தார். இதில் ஆர்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சுந்தர், அயலக அணி நிர்வாகி கப்பல் இ.கங்காதரன், நிர்வாகிகள் அக்பர், பாலமுருகன், சுரேஷ்குமார், செந்தில்வேல், இப்ராஹிம், அப்சல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story