ஆவியூர் காவல் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்*
X
Virudhunagar King 24x7 |4 Feb 2025 5:47 PM IST
ஆவியூர் காவல் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்*
விருதுநகர் மாவட்ட எல்லையான காரியாபட்டி அருகே ஆவியூர் காவல் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை போராட்டம் தொடர்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூரில் அமைந்துள்ள காவல்துறை சோதனை சாவடியில் விருதுநகர் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கார், வேன், பேருந்தில் பயணம் செய்பவர்களை தீவிர சோதனைக்கு பின்பே விருதுநகர் மாவட்ட எல்லையில் இருந்து மதுரை மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சுழி தொகுதியில் மட்டும் பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்து வீட்டுக்காவல் மற்றும், காவல் நிலையம் காவல் என்று வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story