திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..*
X
Virudhunagar King 24x7 |4 Feb 2025 5:54 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஊராட்சி ஒன்றிய தலைவரும், ஊராட்சி செயலாளருமான சிவசங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் அறிவுறுத்தல் படி இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் வைத்து கருப்புபட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநில தலைவர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர்.ஸ்டாலின் ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
Next Story