சாத்தூரில் தமிழக வெற்றிக் கழக புதிய மாவட்டச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
X
Virudhunagar King 24x7 |4 Feb 2025 5:58 PM IST
சாத்தூரில் தமிழக வெற்றிக் கழக புதிய மாவட்டச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
சாத்தூரில் தமிழக வெற்றிக் கழக புதிய மாவட்டச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு..... புதிய மாவட்ட செயலாளர் நகர வீதிகளில் ஊர்வலமாகச் சென்று தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு...... தமிழகத்தில் புதிதாக நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்று புதிய கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் இன்று அக்கட்சிக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கிழக்கு மேற்கு மற்றும் மத்திய எனும் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மூன்று மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய பகுதி விருதுநகர் மத்திய மாவட்டமாக பிரிக்கப்பட்டு இதற்கு புதிய மாவட்ட செயலாளராக சின்னப்பர் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் பகுதியில் ஆட்டோ டிரைவராக இருந்து வரும் சின்னப்பர் தமிழக வெற்றிக் கழகத்தில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்ற பின் முதன் முதலாக சாத்தூர் பகுதிக்கு வருகை தந்த போது வெம்பகோட்டை சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் படை திரண்டு சாத்தூர் சுங்கச்சாவடி அருகே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திறந்த வெளி காரில் பேரணியாக வந்த புதிய மாவட்ட செயலாளர் சாத்தூர் பகுதியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து காமராஜர் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் விஜய் வாழ்க தமிழக வெற்றி கழகம் வாழ்க என கோஷமிட்டவாறு பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இருந்தனர்.
Next Story