நரிக்குடி கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பாக பொறுப்பாளர்கள், பூத் ஏஜென்டுகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
X
Virudhunagar King 24x7 |4 Feb 2025 6:00 PM IST
நரிக்குடி கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பாக பொறுப்பாளர்கள், பூத் ஏஜென்டுகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
நரிக்குடி கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பாக பொறுப்பாளர்கள், பூத் ஏஜென்டுகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்டம் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரசோழன் பகுதியில் கழக மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவரும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழக தேர்தல் பொறுப்பாளருமாகிய சித்திக் தலைமையிலும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக பாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பாக பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பூத் ஏஜென்டுகளின் பணிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர். மேலும் நியமனம் பூத் ஏஜென்டுகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை நரிக்குடி கிழக்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் சித்திக் மற்றும் ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஆகியோர் நகரச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களிடம் வழங்கினர். இதில் கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நி்ர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், பிற அணி ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story