பெரம்பலூரில் ஒன்பதாம் ஆண்டு புத்தகத் திருவிழா

நான்கு நாட்களில் 15,700 பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர் - ரூ.19.91 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது
பெரம்பலூர் மாவட்டம் 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவவினை நான்கு நாட்களில் 15,700 பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர் - ரூ.19.91 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா 31.01.2025 முதல் பெரம்பலூர் நகராட்சித் திடலில் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளின் மாணவ மாணவிகள் ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு சிந்தனை அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கின்றனர். 31.1.2025 முதல் 3.2.2025 வரை நான்கு நாட்களில் 15,700 பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர் - ரூ.19.91 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் 5ஆம் நாளான இன்று பள்ளி மாணவ,மாணவியர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர். இப்புத்தக அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்க புகைப்படத் தொகுப்புகளை மாணவ,மாணவியர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் வாயிலாக தெரிந்துகொண்டனர். மேலும் இப்புத்தகத் திருவிழாவில் புதிய முயற்சியாக மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் காணொளி கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோளரங்கத்தில் 9 கிரகங்களும் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருவதை தத்ரூபமாக காணும் வகையில் ஒளி,ஒலியுடன் ஒளிபரப்பப்படுவதை மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு தெரிந்து பயனடைந்தனர். 31.01.2025 அன்று நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் ரூ.1,38,337 மதிப்பீட்டிலும், 01.02.2025 அன்று ரூ.5,23,877 மதிப்பீட்டிலும், 02.02.2025 அன்று ரூ.7,21,773 மதிப்பீட்டிலும், 03.02.2025 அன்று ரூ.6,07,118 மதிப்பீட்டிலும் என கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ரூ.19,91,105 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியினை 03.02.2025 அன்று வரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று (04.02.2025) சொல்வேந்தர்.சுகி.சிவம் அவர்கள் "பொய்யிலே பிறந்து" என்ற தலைப்பிலும், எழுத்தாளர்.அகரமுதல்வன் அவர்கள் "தீதெல்லாம் நலிக" என்ற தலைப்பிலும், மதுரை கடம்பவனம்.சித்ரா கணபதி அவர்கள் "தமிழர் - வேரும் விழுதும்" என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள். இன்றைய நிகழ்ச்சிக்ளை உடும்பியம் ஈடன் கார்டன்ஸ் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைத்தனர். ஆறாம் நாளான நாளை (05.02.2025) நகைச்சுவை இமயம்.புலவர்.இரா.சண்முக வடிவேல் அவர்கள் "பெண்மை போற்றுவோம்" என்ற தலைப்பிலும், விஜய் டிவி. புகழ் ஈரோடு மகேஷ் அவர்கள் "திறந்தே கிடக்குது கதவு" என்ற தலைப்பிலும், பைந்தமிழ்ச்செல்வி, புதுகை ச.பாரதி அவர்கள் "வாழ்க்கை என்னும் வானம்" என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.
Next Story