அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

பெற்றோர்களை மதிக்க வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். மனிதம் காக்க வேண்டும். மனித நேயம் வளர வேண்டும். சமத்துவம் சகோதரத்துவம் நிலைக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம் ஜமீன் பேரையூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) சக்திவேல் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் குணச் செல்வி, மோகன் குமார் முன்னிலை வகித்தனர். இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச் செம்மல் முனைவர் த. மாயக்கிருட்டினன் சிறப்புரை ஆற்றினார். இலக்கியம் வாழ்வின் உயிர்நாடி. உலகின் முதல் மொழி , மொழி, மூத்த மொழி தமிழ்மொழி. தாய்மொழியின் சிறப்புகளையும் விளக்கினார். பெற்றோர்களை மதிக்க வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். மனிதம் காக்க வேண்டும். மனித நேயம் வளர வேண்டும். சமத்துவம் சகோதரத்துவம் நிலைக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லா சமூகம் உருவாக வேண்டும். அன்பு காட்ட வேண்டும். என்று கருத்துரைத்தார். மாணவி துர்காதேவி அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாணவன் அபிஷேக் நன்றி கூறினார். ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Next Story