ஊராட்சி கழக அலுவலகம் திறப்பு விழா!

ஊராட்சி கழக அலுவலகம் திறப்பு விழா!
X
கொண்டசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஊராட்சி கழக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஊராட்சி கழக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தமிழக வெற்றிக் கழகம் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு அளித்தனர். அப்போது நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story