சமூக சேவைக்கு விருது கலெக்டர் அழைப்பு

X

அழைப்பு
மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள், 2025ம் ஆண்டு மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றி வரும் இளைஞர்களுக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது, 15 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.விருதுடன் ஒரு லட்சம் பணம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு சுதந்திர தின விழாவில், இந்த விருதுக்கு, கடந்த 2024ம் ஆண்டு ஏப்.,1 முதல் 2025 மார்ச், 31,ம் தேதி வரை மேற்கொண்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக, சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவராக இருக்க வேண்டும். அந்த தொண்டுகள் கண்டறியப்பட்டதாகவும், அளவிடக் கூடியதாகவும், உள்ளூர் மக்களிடம் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 30ம் தேதி மாலை 4:00 மணிக்குள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலக 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story