விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ரீதா முன்னிலை வகித்தனர். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி பேசினார். இதில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பழி வாங்கக்கூடாது. வேலை செய்த அனைவருக்கும் கூலி பாக்கியை வட்டியோடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இ.கம்யூ., மாவட்ட துணை செயலாளர் ரவி, வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் ஏழுமலை, சுப்ரமணியன், ராமு, ஒசுரான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story