தேன்கனிக்கோட்டை: மதனகிரி முனேஷ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா

தேன்கனிக்கோட்டை: மதனகிரி முனேஷ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா
X
தேன்கனிக்கோட்டை: மதனகிரி முனேஷ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சி சாமிபுரம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ள மதனகிரி முனேஷ்வரசாமி கோவில் தேர்த்திருவிழா தொடங்கி நடந்தது.இந்த விழாவை யொட்டி நேற்று தேர்த்திருவிழா நடந்தது.இதில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெறது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மதனகிரி முனேஷ்வர சாமி அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து கோவிலை சுற்றி வந்து நிலை நிறுத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது.
Next Story