ஓசூர்: கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா.

X

ஓசூர்: கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக, அபிஷேகம், அலங்காரம், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர்,அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி ஏற்றப்பட்டது. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஓசூர்மேயர் சத்யா,வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் வாழைப்பழம், உப்பு, மிளகு, ஆமணக்கு விதை ஆகியவற்றை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தி னர்.விழாவில், திரளான பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story