பேருந்து மோதி வாலிபர் பலி

X

பலி
உளுந்தம்படி தாலுகா, வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விக்னேஷ், 26; எலவனாசூர்கோட்டையில் சலூன் கடை வைத்திருந்தார். நேற்று காலை 10:45 மணியளவில், உளுந்துார்பேட்டையில் இருந்து வெள்ளையூருக்கு பைக்கில் எம்.எஸ்., தக்கா அருகே சென்றபோது, கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் விக்னேஷ் படுகாயமடைந்தார். அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story