ரெயில்வே பாலம் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

X

ஈரோடு, செங்கோட்டை, திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்
ஈரோடு ரெயில் எல்லைக்கு உட்பட்ட பாசூர் ரெயில் நிலையம் - ஊஞ்சலூர் ரெயில் நிலையத்துக்கு இடையே ரெயில்வே பாலம் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 5-ந் தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு -செங்கோட்டை பயணிகள் ரெயில் 2 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து கிளம்பும். ரெயில்வே பாலம் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் 5-ந் தேதி ஆகிய இரு நாட்கள் மட்டும் இந்த பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து கிளம்புவதற்கு பதிலாக கரூரிலிருந்து செங்கோட்டை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயிலும் இந்த 2 நாட்கள் மட்டும் செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயிலும் இந்த இரண்டு நாட்கள் மட்டும் கரூரிலிருந்து திருச்சி வரை இயக்கப்படும். இதைப்போல் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயிலும் இந்த 2 நாட்களில் மட்டும் திருச்சியில் இருந்து கரூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story