இரண்டு செல்போன் டவர்கள் மாயம்.

X

மதுரை திருப்பரங்குன்றத்தில் இரண்டு செல் போன் டவர்கள் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி மற்றும் ராஜீவ்காந்தி நகரில் தனியாருக்கு சொந்தமான 2 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. 2-ஜி சேவை ரத்தானதால் அவை செயல்படாமல் இருந்துள்ளது. அந்த இரண்டு டவர்களும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத் தின் பராமரிப்பில் இருந்து வந்தது. அதன் டெக்னீசியன் அன்பரசன் என்பவர் இதை பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் அந்த இடத்திற்கு சென்ற போது அங்கு அந்த டவர்கள் இல்லை. அவை திருடப்ப ட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.52லட்சத்து 13ஆயிரத்து 692ஆகும். இது குறித்து கம்பெனி உயர் அதிகாரி சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் மெயின்ரோட் டைச் சேர்ந்த முத்து வெங்கட் கிருஷ்ணன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story