ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்பு 

ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்பு 
X
நாகர்கோவில்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் நேற்று மாலையில் சுமார் 10 வயது சிறுவன் தனியாக அங்கும் இங்கு அலைந்து கொண்டிருந்தான்.  மாலை 5:50 மணி அளவில் கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் செல்ல கன்னியாகு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும் அதில் கூட்ட நெரிசலில் முன்பதிவு இல்லாத பெட்டியல் ஏற முயன்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்து ரயில்வே போலீஸ் சிறுவனிடம் விசாரித்தனர்.      அப்போது தான் சிறுவன் தனியாக வந்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் தந்தை பெயர் முகவரி பற்றி கேட்ட போது, அவனுக்கு எதுவும் தெரியாது மதுரைக்கு செல்கிறேன் என்றான். இதை அடுத்து காவல் நிலையத்தில் கொண்டு செல்ல  முயன்றதும் தந்தையின் பெயர் செல்போன் எண்ணை கொடுத்தான்.      விசாரணையில் சிறுவன் மதுரை மாவட்டம்  சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். குமரி மாவட்டம் குளச்சல் உள்ள உறவினர் வீட்டில் இருந்துள்ளான். அங்கு கோபித்துக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக தனியாக ரயில் நிலையம் வந்து, ரயில் ஏறி செல்ல இருந்தது தெரிய வந்தது.       இதையடுத்து சிறுவனுக்கு அறிவுரை கூறி சாப்பாடு வாங்கி கொடுத்து, சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து பின்னர் சிறுவனை காப்பகத்தில் தங்க வைத்தனர். உறவினர்கள் வந்த பின் சிறுவனை பத்திரமாக ஒப்படைப்போம்  என போலீசார் கூறினர்.
Next Story