ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X
அகற்றம்
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் மற்றும் புத்திராம்பட்டு பகுதியில் உள்ள ஓடை மற்றும் கல்லாங்குத்து பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிலர் விவசாயம் மற்றும் வீடுகளை கட்டி வருகின்றனர்.இது தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. சங்கராபுரம் தாசில்தார் விஜயன் மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அளவீடு செய்து அதை அகற்ற பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து மூன்று ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அங்கு இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உட்பட, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அளவீடு பணிகள் தொடர்ந்து நடப்பதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story