கிள்ளியூர் ஒன்றிய திராவிடர் கழகக் கூட்டம்

X

கருங்கல்
கிள்ளியூர் ஒன்றிய திராவிடர்கழக கலந்துரையாடல் கூட்டம் கருங்கல் திராவிடர்கழக பேரூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. திராவிடர்கழக பேரூர் செயலாளர் த.ஜெயக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். திராவிடர்கழக கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் கருத்துரையாற்றினார். திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், திராவிடர்கழக வளர்ச்சிப்பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார் தோழர்கள் கலைப்பிரியன் உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர் தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமயமாக்க ஓயாது உழைக்கும் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துக்களை பரப்பிவரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது, சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர்கழகப் பொதுக்குழு தீர்மானங்களை முழுமனதாக ஏற்று வரவேற்று குமரிமாவட்டத்தில் செயல்படுத்துவது, கிள்ளியூர் ஒன்றிய திராவிடர்கழகம் சார்பாக திராவிடர் கழக பொதுக்கூட்டம் கருங்கல் பகுதியில் நடத்துவது, கருங்கல் பேருந்துநிலைய பணியினை உடனே தொடங்கி பொதுமக்கள் நலன் கருதி விரைந்து முடிக்க கருங்கல் பேரூராட்சியைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திராவிடர்கழக கிள்ளியூர் ஒன்றிய செயலாளராக கலைச்செல்வனும், கருங்கல் பேரூர் செயலாளராக த.ஜெயக்குமாரும் அறிவிக்கப்பட்டனர்
Next Story