அதிகாரிகளுக்கு ஈரோடு எஸ்.பி.உத்தரவு

X

மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்க மாலை, இரவு நேர ரோந்துகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எஸ் பி உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப் -டிவிஷனுக்கு கீழ் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் -இன்ஸ்பெக்டர்களுடன் மாவட்ட குட்ட சம்பவங்களை குறைப்பது குறித்தும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வயர்லெஸ் மைக்கில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக பல்வேறு அறிவுரைகளையும், உத்தரவுகளையும் வழங்கினார். அப்போது எஸ்.பி சுஜாதா பேசியதாவது:-மாவட்டத்தில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடக்கின்றது. விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் இடத்திற்கு நேரில் சென்று இன்ஸ்பெக்டர்கள் விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து விதிமிரல் வழக்கு பதிவு செய்வதை போல நான்கு சக்கர வாகனங்களையும் வாகன தணிக்கையின் போது நிறுத்தி விதி மீறல் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் அதிக அளவிலான அடிதடி வழக்குகள் பதிவாகி வருகிறது. இதிலிருந்து போலீசார் மாலை நேர ரோந்து, இரவு ரோந்து செல்வதில்லை என்பது தெரிகிறது. போலீசார் முறையாக ரோந்து சென்றாலே அடிதடி தொடர்பான வழக்குகள் பெருமளவில் குறையும். எனவே மாலை நேர ரோந்து, இரவு ரோந்து பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள், பண்ணாரி அம்மன் கோவில் விழா நடந்து வருகிறது. இதற்கு பாதுகாப்பு பணிக்கு போலீசாரை நியமிக்க போலீசார் எண்ணிக்கையை கேட்டால் போலீஸ் நிலையங்களில் முறையான பதில் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்கள் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாரின் எண்ணிக்கையை உடனுக்குடன் போலீஸ் தலைமை கேட்கும் பட்சத்தில் தெரிவிக்க வேண்டும். கடந்த 2022, 2023, 2024 நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் முறையில் உரிய ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். கஞ்சா, லாட்டரி, மது உள்ளிட்டவை விற்பனை குறித்து சமூக வலைத்தளங்களில் வருவதற்கு முன்னதாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்
Next Story