மாவட்ட தீயணைப்பு அலுவலர் தகவல்

X

பண்ணாரி அம்மன் குண்டம் விழா 4 தீயணைப்பு வாகனங்களில் 45 வீரர்கள் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று கம்பம் நடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி விழா மறு பூஜை உடன் நிறைவு பெற உள்ளது.குண்டம் விழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம் என்பதால் குண்டம் நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களை தடுக்கவும், வனத்தை ஒட்டிய இடத்தில் தீ விபத்து நடைபெறாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 தீயணைப்பு வாகனங்களில் 45 தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் கூறியதாவது:- பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சத்தியமங்கலம், ஆசனூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 4 தீயணைப்பு வாகனம் , ஒரு பம்ப் வாகனமும் வருகிற 6-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் 35 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குண்டம் விழா அன்று குண்டம் இறங்கும் பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பு கருவி கூடுதலாக கமாண்டோ வீரர்கள் 10 பேர் என மொத்தம் 45 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குண்டம் விழா நிறைவடைந்ததும் இரண்டு தீயணைப்பு வாகனமும் தொடர்ந்து விழா நடைபெறும் பாதுகாப்பு பணிக்கு நிலை நிறுத்தப்படும்.
Next Story