கன்னியாகுமரி : ரயில் மோதி இறந்த மூதாட்டி

கன்னியாகுமரி : ரயில் மோதி இறந்த மூதாட்டி
X
சாத்தான்குளத்தை சேர்ந்தவர்
கன்னியாகுமரி அருகே சந்தையடியில்  நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் நாகர்கோவிலில் ரயில்வே போலீசார் சென்று இறந்து போன மூதாட்டி உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தது.      அப்போது இறந்து போனவர் வைத்திருந்த பையில் ஒரு தபால் நிலைய சேமிப்பு கணக்கு புத்தகம் இருந்தது. அதில் உள்ள முகவரி மூலம் விசாரித்த போது இறந்து போனவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி (65) என்பது தெரிய வந்தது.       இவர் கடந்த 2023ல் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என  கூறப்படுகிறது. இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்துள்ளனர். இந்த நிலையில் அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். தமிழ்ச்செல்வி இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தற்போது நாகர்கோவில் வந்துள்ளனர்.
Next Story