நுள்ளிவிளை : ஆசிரியர் நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

X

அங்கன்வாடி மையத்திற்கு
நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட குதிரை பந்தி விளயில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி ஆசிரியர் அவ்வப்போது வந்து செல்கிறார். எனவே அங்கன்வாடிக்கு நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்க வேண்டும், அங்கன்வாடி குழந்தைகள் உடல் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலைக் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வில்லுக்குறி வட்டார செயலாளர் திலீப் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதி பாசு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, மாவட்ட குழு உறுப்பினர் சுசிலா உட்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story