தியாகிகளின் நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தியாகிகளின் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தின் கைரேகை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீர மரணம் அடைந்த தியாகிகளின் நினைவு தினமான இன்று அவர்களின் தியாகத்தை போற்றிடும் வகையில் அவர்களது நினைவு மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உடன் அமமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story