ஆளில்லா விண்கலம். விஞ்ஞானி தகவல்.

மதுரை அருகே பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார்.
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இன்று (ஏப்.3) நடைபெற்ற 67வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் அசோக்குமார் வரவேற்புரை கூறினார். இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் சிறிய ரக ராக்கெட்டுகள் தினமும் விண்ணில் செலுத்த வாய்ப்புகள் அதிகம் என்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் வரும் காலங்களில் விண்ணிற்கு மனிதனை செலுத்த தயாராகி வருகிறோம் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம் என்றும் ககன்யான் திட்டமே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆராய்ச்சியின் அடிப்படையில் தான் தற்போது ஆளில்லா விண்கலம் மூலம் ஆய்வுகள் செய்ய தயாராகி உள்ளம் வருங்காலங்களில் இந்தியர்கள் விண்ணுக்கு செல்ல தயராகி உள்ளோம் என்றார்.
Next Story