தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மதுரை வந்தடைந்தார்.
மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து இண்டிகோ விமான மூலமாக இன்று (ஏப்.3)மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தர். மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணன் மதுரை துணை மேயர் நாகராஜன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர் . மதுரை விமான நிலையத்திற்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்நது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் மூர்த்தி, பி.டி. ஆர் பழனி வேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன் அமைச்சர்கள் வருகை புரிந்தனர்.
Next Story