சுசீந்திரம் : வைக்கோல் போரில் தீ விபத்து

X

கன்னியாகுமரி
சுசீந்திரம் பகுதி உதிரப்பட்டி செல்லும் பாதையில் தனியார் திருமண மண்டபம் அருகே சுடலை என்பவர் மனைவி பகவதி ( 60) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமார் 20 பசு மாடுகளை பராமரித்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார். அந்த பசு மாடுகளுக்கு தீவனம் வழங்க 600 வைக்கோல்கட்டுகளை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் இன்று மதியம் திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த பகவதி அக்கம் பக்கத்தினரிடம் உதவியுடன் வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்டும் அணையாமல் தீ கொழுந்து விட்டு எறிந்தது. தகவல் அறிந்ததும் தேரூர் கிராம நிர்வாக அதிகாரி புரோஸ்கான் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல் தலைமையில் தீயணைக்கும் துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை 4 மணி நேரம் போராடி அனைத்தனர். இதற்கிடையில் திடீரென மழையும் பெய்ததால் தீ சற்று தணிந்தது. இல்லை என்றால் வைக்கோல் படப்பிற்க்கு அருகே பசு மாடுகள் கட்டப்பட்டு இருந்தது அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தீயின் புகை அதிகமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ என அச்சத்தில் இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Next Story