கன்னியாகுமரியில் நூலகம் விரிவாக்க பணி

X

அடிக்கல் நாட்டு விழா
கன்னியாகுமரியில் 22 லட்சம் ரூபாயில் நூலகம் விரிவாக்க பணி அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நூலகம் கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட இருக்கின்றது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது கன்னியாகுமரி பங்கு பணியாளர் உபால்ட் அர்ச்சித்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி 13 வது வார்டு சகாய சர்ஜினாள், மற்றும் கவுன்சிலர்கள் சிவசுடலைமணி, இக்பால், ராயப்பன், பூலோகராஜா மற்றும் சுகாதார அலுவலர் முருகன், புனித அலங்கார உபகார மாதா திருத்தல துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், திமு கழக நிர்வாகிகள் பிரைட்டன், ஆனந்த், அன்பழகன், மெல்பின், ரெஞ்சித், ராயப்பன், தமிழன் ஜானி, நாஞ்சில் மைக்கேல், புஷ்பராஜ், ரூபின் காங்கிரஸ் பிரமுகர் தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story