கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல்வர் பங்கேற்பு.

மதுரையில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று ( ஏப்.3) மாலை கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் சிறப்புக் கருத்தரங்கத்திற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கணேசன் வரவேற்றுப் பேசினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் நோக்க உரையாற்றினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார். உடன் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story