மும்பை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

X

கோடை கால ரயில்
மும்பை - கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.15 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். என அறிவித்து உள்ளது.
Next Story